உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

சீதுவை – கொட்டுகொட வீதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொட்டுகொட நோக்கி அதிவேகமாகப் பயணித்த உந்துருளி ஒன்று, அதற்கு எதிரே வந்த பாரவூர்தியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விபத்தில் மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது சீதுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதி சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து நிகழ்ந்த விதம் குறித்து சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0