உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய இந்த சந்தேகநபர் களனிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பேருந்து நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படை மூலம் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0