உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

38 பார்வைகள்

உலகப் புகழ்பெற்ற விளையாட்டு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான நைக்கி (Nike), எதிர்வரும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடருக்காகத் தான் தயாரித்துள்ள சீருடைகளில் (Kits) ஏற்பட்டுள்ள வடிவமைப்பு குறைபாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து தொடருக்காக இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் சீருடைகளை நைக்கி நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளின் போது, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வீரர்கள் அணிந்திருந்த சீருடைகளின் தோள்பட்டைத் தையல் பகுதிகளில் (Shoulder seams) ஒருவித வீக்க தன்மை (Bulging) காணப்பட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நைக்கி நிறுவனப் பேச்சாளர், “தேசிய அணிகளுக்கான எமது சீருடைகளில் தோள்பட்டைத் தையல் பகுதியில் ஒரு சிறிய குறைபாடு இருப்பதை அவதானித்துள்ளோம் எனவும் இது வீரர்களின் ஆட்டத் திறனைப் பாதிக்காது என்றாலும், அதன் தோற்றம் (Aesthetic) நாம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்களது தயாரிப்புத் தரத்தில் ஏற்பட்ட இந்தச் சரிவைச் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீரர்கள் அணியும் ‘Match’ சட்டைகள் மட்டுமன்றி, ரசிகர்கள் வாங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட ‘Stadium’ சட்டைகளிலும் இதே குறைபாடு காணப்படுகின்றது.

அதிக விலை கொடுத்து வாங்கிய சட்டைகளில் இவ்வாறான குறைபாடுகள் இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் கடும் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் ‘Performance Cooling’ தொழில்நுட்பத்துடன் இந்தச் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஜூன் 17ஆம் திகதி குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய நைக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0