உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு-கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சாட்சியமளிக்க முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்.

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
98 பார்வைகள்

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(10) சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

-அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு சாட்சியமளிக்க என்னை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) அழைப்பு விடுத்திருந்தனர்.

குறிப்பாக, 51 சைனா பஜார் (China Bazar) கடைகளை வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

இதில் 49 கடைகள் முறையான கொள்வனவு நடைமுறை சட்டத்தை (சட்டம் 80:46) மீறி, எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு சுமார் 5 கோடி 31 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் CID அதிகாரிகள் பரிசீலித்த போது, ஊழல் நடை பெற்றுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கணக்காய்வாளர் நாயகத்தின் (General Auditor) அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக வும், வாக்குமூலம் வழங்குவதற்காகவும் என்னை மீண்டும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளார்.விசாரணைக்கு தேவையான சில மேலதிக ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

⁠மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுக்கவும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பது எமது இலக்காகும்.என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

124 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

129 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

138 0 0