உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

79 பார்வைகள்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியில் இலங்கை வம்சாவளி வீராங்கனை வினாலி வீனஸ் வீரப்புலி இடம்பெற்றுள்ளார்.

இவர் கோல்ட்ஸ் கரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் கழகம், நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கழகம் ஆகியவற்றின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் துஷார அஜன்த வீரப்பலியின் மகள் ஆவார்.

துஷார அஜன்த வீரப்புலி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.வினாலி வீனஸ் 2009ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வெஸ்ட் மிட்ல்செக்ஸ் வைத்தியசாலையில் பிறந்தார்.

இங்கிலாந்தின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் என வருணிக்கப்படும் வினாலி வீனஸ், ப்றட்பர்ட் க்றம்மர் ஸ்கூலில் கல்வி பயின்று வருகிறார்.

16 வயதுக்குட்பட்ட அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான சார்லட் எட்வேர்ட்ஸ் விருதை வென்றெடுத்த சில தினங்களில் வினாலி வீனஸ், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

லன்காஷயர் மற்றும் தண்டர் அக்கடமி (பயிற்சியகம்) ஆகிய அணிகளின் சுழல்பந்துவீச்சாளரான 16 வயதுடைய வினாலி வீனஸ், பயிற்சியக மற்றும் கழக மட்டப் போட்டிகளில் கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் 124 விக்டெக்களைக் கைப்பற்றி இருந்தார். பயிற்சியக கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் 33 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.தந்தை துஷார அஜன்த வீரப்புலியின் வழிகாட்டலில் MCC Foundation’s Cricket Beyond Boundaries இல் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த வினாலி வீனஸ், இங்கிலாந்து லன்காஷயர் கிரிக்கெட் ஆற்றல் கட்டமைப்பில் இணைக்கப்பட்டார்.

வினாலி வீனஸுக்கு கடந்த நவம்பர் 6ஆம் திகதி சார்லட் எட்வேர்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற சில தினங்களில் அவர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

‘கடந்த கிரிக்கெட் பருவகாலம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த விருதை பெறுவதென்பது பெருமை தரும் விடயமாகும். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்ட இங்கிலாந்து ஆயத்த கட்ட அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது அதனை விட பெரிய விடயமாகும். அங்குள்ள பயிற்றுநர்களிடம் நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்’ என அப்போது வினாலி வீனாஸ் கூறியிருந்தார் 15 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட மற்றும் சிரேஷ்ட லன்காஷயர் அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியுள்ள வினாலி வீனஸ் வீரப்புலி, தற்போது தண்டர் பயிற்சியக அணியில் இடம்பெறுகின்றார்.

இந் நிலையில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்த வினாலி வீனஸ், தற்போது 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுகிறார்.

அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் இயன் ஹீலி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மும்முனை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வினாலி வீனஸ், 8 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களைக் கொடுத்தார். துடுப்பாட்டத்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0