உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

32 பார்வைகள்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ஏப்ரல் 06 ஆம் திகதி இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீர்மானித்து களமிறங்கியது.

எனினும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, கொல்கத்தா 3.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களை எடுத்து மோசமான தொடக்கத்தைப் பெற்றிருந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட், இரண்டாவது ஓவரில் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

மழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

இது அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கிடைத்த முதல் புள்ளியாகும்.

அதேநேரத்தில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்றதன் மூலம், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஏப்ரல் 07 ஆம் திகதி இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0