உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!

53 பார்வைகள்

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது, ஏப்ரல் 04 ஆம் திகதி நேற்றிரவு நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெயஸ்வால் 36 பந்துகளில் 55 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற, துருவ் ஜூரல் அதிகபட்சமாக 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள‍ை எடுத்தார்.
பின்னர் பதிலுக்கு கடினமான இலக்கினை நோக்கி போராடிய ரஷித் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களை மாத்திரம் பெறமுடிந்தது.

அந்த அணி சார்பில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன் 44 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

ராஜஸ்தான் அணிக்காக பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியானது, நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு அடுத்த போட்டிக்கான உத்வேகத்தை அளித்ததுடன், புள்ளிப் பட்டியலில் அவர்களை முதலிடத்துக்கு கொண்டு சேர்த்தது.

அதேநேரம், இது தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இரண்டாவது தோல்வியாகும் – அவர்கள் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளனர்.
இதேவேளை, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மாலை நடந்த மற்றொரு ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை ஆறு விக்கெட்டுகளினால் வீழ்த்தியிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியானது 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.

டெல்லி அணிக்காக விளையாடிய இலங்கை நட்சத்திரம் பத்தும் நிஸ்ஸங்க இந்த இன்னிங்ஸில் 30 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0