உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

32 பார்வைகள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஏப்ரல் 03 நேற்றிரவு சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியில் 210 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கினை துத்திரய பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நேஹல் வதேராவுடன் நான்காவது விக்கெட்டுக்கு அமைத்த 59 ஓட்டங்கள் கூட்டணியின் உதவியால் எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 210 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இது நடப்பு ஐ.பி.எல். சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றியாகும்.
அதேநேரம், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது தோல்வியும் ஆகும்.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை குவித்தது.

சென்னை அணி சார்பில் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
அவர் தவிர, சிவம் டூபே 45 ஓட்டங்களையும், சர்பராஸ் கான் 32 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்து தங்களது பங்களிப்பினை அணிக்கு வழங்கியிருந்தனர்.

பின்னர், 210 என்ற ஓட்டத்தை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கினை அடைந்தது.

பஞ்சாப் அணி சார்பில் அதிகடியாக ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 50 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியுடன் பஞ்சாப் அணியானது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, அதேநேரம் சென்னை அணியானது இறுதி இடத்துக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0