உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி!

38 பார்வைகள்

இப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் முதல் இரு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து பெஸ்ஸகி இப்பருவகாலத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது கட்டப்போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. 20 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே இம்முறை பெட்ரோ கொஸ்டா சிறப்பாக செயற்பட்டு முன்னிலைப்பெற்றார்.

அதே நேரம் ஒரு முடிவோடு களமிறங்கியுள்ள பெஸ்ஸகி மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார். அவர் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர 3மிடத்தில் மார்ட்டினும் தனது வேகத்தை அதிகரித்து முன்னிலைப்பெறச்சென்றுக்கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக கொஸ்டாவும் பெஸ்ஸகியும் பாரிய விபத்தை எதிர்கொள்ள இருந்தார்கள். இருந்தாலும் சிறப்பாக செயற்பட்ட பெஸ்ஸகி கொஸ்டாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார்.

மார்க் மார்க்கஸ் 4மிடத்தில் போட்டியை தொடர்ந்தார். 6வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. திடிரென போட்டியின் நிரல் பட்டியல் மாறத் தொடங்கியது.

ஒவ்வொரு வீரர்களும் முன்னிலைப்பெற தங்களது வேகத்தை அதிகரிக்க தொடங்கினார்கள். மார் மார்க்கஸ் 7ஆம் இடத்திற்கு பின்தள்ளபட்டார். இன்னும் மோசமாக சென்று பின்னர் 11 ஆம் இடத்திற்கு மார்க்கஸ் பின்னதள்ளப்பட்டார்.

13வது சுற்றில் வைத்து டியோஜியான்ன்டோனியோ சிறப்பாக செயற்படடு 4ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தினார். அதேநேரம் 14வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. மார்ட்டின் கொஸ்டா மாறி மாறி இரண்டாமிடத்ததை பெற்றுக்கொண்டனர்.

இம்முறையும் முதல் இடத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி சென்றுக்கொண்டிருந்தார் பெஸ்ஸகி, 15வது சுற்றில் வைத்து அகுரா தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

3 சுற்றுக்குள் எஞ்சியிருந்த நிலையில் சிற்ப்பாக செயற்பட்ட மார்க் மார்க்கஸ் 5 ஆம் இடத்திற்கு முன்னேறினார். இறுதியில் 20 சுற்றுக்களையும் 40 நிமிடங்கள் 50 செக்கன்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து அமெரிக்க குரோன்ப்ரீயையும் கைப்பற்றி இப்பருவகாலத்தின் தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

121 சுற்றுக்கள் வெற்றி தொடர்ச்சியாக 5வது வெற்றியென பெஸ்ஸகியின் சாதனை தொடர்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0