உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 02.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை வேண்டும். அவசரம் கூடாது. எதிரி தொல்லை இருக்கும். நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். பொறுமையை இழந்து நீங்கள் செய்யும் வேலைகள் உங்களுக்கு எதிராக மாறும். ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். இறை வழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உடல் அசதி, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்காது. கொஞ்சம் மந்தமான இந்த நாளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். மாணவர்களுக்கு கல்வியில் சுறுசுறுப்பு இருக்காது. கவனமாக செயல்பட வேண்டிய நாள். இறை வழிபாடு செய்யுங்கள். நீண்ட தூரப் பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்லபடியாக அமையும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதிருப்தியோடு இந்த நாள் நிறைவடையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டு. உடல் உபாதைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். வீண் விரைய செலவுகள் குறையும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது. உங்களுக்கு முக்கியமான மீட்டிங், இன்டர்வியூ ஏதாவது இருந்தால் 1 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு சென்று விடுங்கள். தாமதத்தால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தடைகள் தடங்கள், இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கப் போகிறது. வெற்றி எளிதில் கிடைக்காது. போராடி தான் இந்த நாளை நகர்த்திச் செல்ல வேண்டும். இறை நம்பிக்கையோடு செயல்படுங்கள். நம்பிக்கையை இழக்க வேண்டாம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மன தைரியமும், துணிச்சலும், விடாமுயற்சியும் இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உற்சாகம் பிறக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது வேலை உங்களைத் தேடி வரும். புது வாய்ப்புகள் உங்களுக்கு வரும்போது, அதை கை நழுவ விட வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம், பதட்டம் கொஞ்சம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள். பெரியவர்களது பேச்சை கேளுங்கள். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் இன்று அவசரப்படக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நிதானம் இருக்கட்டும். புது வேலையை தொடங்குவதாக இருந்தால் அதை நாளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பின்னடைவுகள் வரலாம். கவனத்தோடு செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். வெயிலால் உடல் அசதி ஏற்படும். நிறைய தண்ணீர் குடியுங்கள், உடம்பை ஆரோக்கியத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக பேச வேண்டாம். செயல்பாட்டில் உங்களுடைய திறமையை காட்டினால் வெற்றி நிச்சயம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0