அமெரிக்க டொலருக்கு எதிராகஇலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி.!
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கியின் தரவுகளின்படி, சந்தை முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.311.76 ஆகவும், விற்பனை விலை ரூ.319.31 ஆகவும் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலையால் உருவான வெளிநாட்டு துறை அழுத்தங்களே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2026 ஜனவரி – பெப்ரவரி காலப்பகுதியில் நடைமுறை கணக்கில் 487 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகம் பதிவாகியுள்ளது.
எனினும், வர்த்தக பற்றாக்குறை 1.1 பில்லியன் டொலரிலிருந்து 1.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும்வாகன இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2026 பெப்ரவரி இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7.3 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.