உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மூடப்பட்டுள்ள உடப்புஸ்ஸல்லாவ கம்பஹா தோட்டத் தொழிற்சாலையை திறக்குமாறு இ.தொ.கா கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மூடப்பட்டுள்ள உடப்புஸ்ஸல்லாவ கம்பஹா தோட்டத் தொழிற்சாலையை திறக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி சம்மந்தமாக இ.தொ.காவின் பொதுச் செயாலாளர் ஜீவன் தொண்டமான் பா.உ அவர்களின் பரிந்துரைக்கு அமைய இ.தொ.கா நுவரெலியா மாநில இயக்குனர் எஸ்.கோவிந்தராஜ் இது தொடர்பாக தோட்ட நிர்வாகி மற்றும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பிரதி பொது முகாமையாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளார்.

இக் கலந்துரையாடலில் இத் தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலையில் வேலை செய்த சுமார் 40 தொழிலாளர்கள் மலையில் வழமையான வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது ஈட்டிய வருமானத்தை இழந்துள்ளனர்.

அத்துடன் இத் தொழிற்சாலையில் தேவையான நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இதற்கு பல மில்லியன்
ரூபா கம்பனியால் செலவிடப்பட்டு இப்போது மூடப்பட்டுள்ளது. பூர்வீகமாக ஒரு கேந்திர நிலையமாக உள்ள இதனை மூடுவது பல்வேறு வகையில் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறு மூடுவதை தொழிற்சங்க ரீதியில் வன்மையாக கண்டிப்பதாகவும் இதை மீண்டும் திறக்குமாறும் கோரிக்கையினை கோவிந்தராஜ் விடுத்துள்ளார்.

இவருடைய கோரிக்கையை ஏற்ற நிர்வாகமும், கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பொது முகாமையாளர் ஆகியோர் தற்போதுள்ள வறட்சியால் தேயிலை தூள் விலை வீழ்ச்சியின் காரணமே இத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்ற உத்தரவாதம் கடிதம் மூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

67 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0