கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உந்துருளி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியான 24 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக சூடான பானங்களை வழங்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நீரினால் பரவக்கூடிய நோய்கள் பரவும் அபாயம்...
கிளிநொச்சியில் நபர் ஒருவர் மீது யானை தாக்குதல்!
கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல்...
சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் படுக்கையறையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சீதுவை, முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும்...
அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை நலிவடைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!
அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கைநலிவடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது...
அழிக்கப்படும் வடமாகாணக் கல்வி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!
ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார் இதுதொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,வடமாகாணத்தில் 'சேவையின்...
சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது
சட்ட விரோதமான முறையில் மரக் குற்றிகளை கடத்த முயன்ற நபர் ஒருவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி அரச...
நெடுந்தீவு கடல் போக்குவரத்து விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் – டக்ளஸ் அவசர கோரிக்கை
நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துச் சேவையைச் சீராக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...
யு.என்.டி.பி. திட்டங்களை மதிப்பீடு செய்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித்...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அலுவல்கள்...
தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!
இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28...










