எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இக் கூட்டத்தில் பங்கு பற்றி இருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய தேர்தல் விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது எனக் கூறினார்.
அத் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இத் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.










