உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

அவதூறு வழக்கு தொடர எச்சரிக்கை – அல்லு அர்ஜுன் தரப்பு கடும் நிலைப்பாடு.!

சினிமா 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா’ திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். திரைப்படங்களுடன் விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிராண்ட் உத்தி குழுவில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் காவேரி பருவா என்ற நபர், விளம்பரத் தொடர்பாக அல்லு அர்ஜுனை சந்திக்க முன் கடைப்பிடிக்க வேண்டிய 42 கடுமையான விதிமுறைகள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.


அந்த விதிகளில், “நேரடியாக கண்களை பார்க்கக் கூடாது, கைகுலுக்கக் கூடாது, அனுமதியின்றி பேசக் கூடாது, இடையில் நகரக் கூடாது” போன்ற கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.இதன் பின்னர் சமூக வலைதளங்களில் அல்லு அர்ஜுனை விமர்சிக்கும் மற்றும் கேலிச்செய்யும் பதிவுகள் அதிகரித்தன.


இந்நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும், “அல்லு அர்ஜுன் எப்போதும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்பவர்.

இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர எங்கள் சட்டக் குழு தயாராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“தர்மன்” படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான…

31 0 0
சினிமா

கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா மந்தனா!

இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை…

40 0 0
சினிமா

சூர்யா – ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினரின் ‘20 Years of Love & War’ Collab காணொளி சமூக வலைத்தளங்களில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.…

34 0 0
சினிமா

திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!

முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

62 0 0