1920
ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1808
ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.
1821
ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1831
வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன்போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1888
முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1911
லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.
1957
சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.
1959
அமெரிக்க ஜனாதிபதி டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50ஆவது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.
1963
தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1971
பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.
1982
லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.
1983
பிலிப்பைன் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986
கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கி.மீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1988
நேபாள – இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.
1991
லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991
சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
1993
நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.
1994
மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.
1995
அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.
2007
சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
2013
சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2014
பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2014
குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.















