• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!

Mathavi by Mathavi
June 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படக் கூடாது.!
Share on FacebookShare on Twitter

​தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

​சமகால அரசியல் நிலை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

மாகாண சபையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்பதே அவர்களின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் நாசுக்கான முறையில் மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒருவகையில் மக்களின் இந்த சந்தேகத்தில் உண்மையும் இருக்கின்றது.

​மேலும், கடந்த கால வரலாற்றை சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறு பல முயற்சிகள் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவான போதெல்லாம், அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் சாணக்கியத்தால் அவற்றை தடுத்து நிறுத்தி, மாகாண அரசின் ஊடாகவே அத்திட்டங்களை முன்னெடுக்க வழிவகை செய்திருந்தார் என்றும், இன்று அவ்வாறானதொரு அரசியல் ஆளுமை தமிழ் தரப்பில் மத்தியில் இல்லாதுள்ளமையின் வெளிப்பாடே இந்நிலைமைக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

Related Posts

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

கல்முனைப்  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை – 33 வாகனங்கள் பறிமுதல்!

by selvan
June 29, 2026
0

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனை நடவடிக்கைகளில் 32 மோட்டார் சைக்கிள்களும்  ஒரு முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28)...

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

வன்முறைக் கும்பல் அட்டகாசம்; அடித்து உடைக்கப்பட்ட வீடு.!

by Mathavi
June 29, 2026
0

நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்...

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

மூளாய் நான்காம் வீதிக்கான அடிக்கல் நாட்டல்.!

by Mathavi
June 29, 2026
0

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மூளாய் 4ஆம் வீதியின் புனரமைப்பு பணிகளானது இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த...

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 29, 2026
0

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 52 போக்குவரத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. குறித்த நடவடிக்கை...

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது.!

by Mathavi
June 29, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இன்று (29) அதிகாலை பொலிஸார் வீதிச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, விசுவமடு பகுதியிலிருந்து அனுமதி இன்றி மரங்களை...

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

பொசன் ஊர்வலம் மற்றும் கவிதைச் சொற்பொழிவு.!

by Mathavi
June 29, 2026
0

இந்த ஆண்டு, பொசன் திருவிழாவைக் குறிக்கும் வகையில், மஸ்கெலியா துனுத்துடு ஓய மகா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன், இன்று பொசன் ஊர்வலமும் அழகான கவிதைச் சொற்பொழிவும் நடத்தப்பட்டன....

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

இன்று என்.பி.பி. அரசில் இருப்பவர்கள் குரங்குகளைப் போலவே நடக்கிறார்கள்.!

by Mathavi
June 29, 2026
0

இன்று தேசிய மக்கள் சக்தி அரசில் இருப்பவர்கள் அனைவரும் குரங்குகளைப் போலவே நடந்து கொள்கின்றார்கள் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளை மறந்து மதம் பிடித்தவர்களைப் போல் செயற்படுகின்றார்கள் என்றும்...

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல்; யாழ். மாநகர சபையால் ஆரம்பம்.!

by Mathavi
June 29, 2026
0

யாழ். மாநகர சபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தும் பணியினை யாழ். மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய மின்விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன....

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

by Mathavi
June 29, 2026
0

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம்...

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 29, 2026
0

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி