குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் இரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் இரசிகர்கள் தன்னை சமூக வலைத்தளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் இரசிகர்கள் ரம்யாவை சமூக வலைத்தளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைத்தள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.









