சீனாவின் கசாக் மாகாணம், ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்தப் பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைந்துள்ளது.
இதில் ஏறி நின்று இயற்கை அழகை இரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று (07) சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர். மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரியவந்துள்ளது.










