ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகளின் ஆரம்பமாக மார்கழி மாதத்திற்குள் 6,50,000 தென்னைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “2030 ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட மார்கழி மாதத்திற்குள் 6,50,000 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் 72,000 தென்னங்கன்றுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இந்த நடுகைத்திட்டம் மூலம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது” என்றார்.