பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக உதயகுமார் யுகதீஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 9 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவிற்கு 2 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு 1 உறுப்பினருமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் கொண்ட சபையில் இன்று காலையில் 11:30 மணியளவில் ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு அவர்கள் தலைமையில் தெரிவு இடம்பெற்றது.
தொடர்பு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. உப தவிசாளராக கனகரத்தினம் சிறிகாந்த் ஏகமனாத தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.














