மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகமும் இணைந்து நடத்திய பொது அறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதிப் பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
முன்னால் ஆணையாளர்களான திரு.ரி.அருணகிரிநாதன், திரு.சி.புண்ணியமூர்த்தி, திரு.ச.நவநீதன், திரு.மா.உதயகுமார், திரு.க.சிவநாதன், திரு.கா. சித்திரவேல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மநகரசபையின் சிவில் பொறியிலாளர் திருமதி.லி. சித்திராதேவி, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.சி. துஸ்யந்தன், மாநகர பிரதம கணக்காளர் திரு.க. அரசரெட்ணம், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. கிருள்சாதேவி பிறேமகுமார் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் முன்னால் ஆணையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.




