சிவபூமியாம் திருமூலரால் போற்றப்பட்டு வரும் லங்காபுரியில் கிழக்கு மகாணத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் எழில் கொஞ்சும் வயல் வெளிகளும் ஆறுகளும், வேம்பு, கமுகு, தென்னை, பலா, வாழை நிறைந்த அழகிய தம்பிலுவில் கிராமத்தில் பல்லாயிரம் ஆண்டு காலமாய் குடி கொண்டு மக்கள் குலங்காக்கும் காவலாள் கண்ணகை தாயவளின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி உற்சவமானது 03.06.2025 செவ்வாய் கிழமை திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாகி ஏழுநாட்கள் திருவிழாக்கோலம் பூண்டு 09.06.2025 திங்கட்கிழமை திருக்குளிர்ச்சி நீராடலுடன் இனிதே நிறைவடையவுள்ளது.
இவ் திருக்குளிர்ச்சி பூசை சடங்கு நிகழ்வுகள் யாவும் ஸ்ரீமான் கந்தையா தங்கத்துரை அவர்களின் விண்ணுலக அருளாசியுடன் அவரின் சீடர் திரு.சத்தியசீலன் டினசீலன் கப்புகனார் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் திரு.க.கணேஷன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அனைவரும் வருக அன்னை பத்தினியாள் கண்ணகை அம்மன் அருள் பெறுக.
