• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு

Mathavi by Mathavi
May 2, 2025
in இலங்கை செய்திகள்., கட்டுரைகள்
0
வடகிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோக ஆதரவு
Share on FacebookShare on Twitter

இலங்கை வரலாற்றில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்தது. கிழக்கு மாகாணத்தில் இக்கட்சி உதயமானாலும் முதல் முதலாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது மாகாண சபைத் தேர்தல் மூலமாக வடகிழக்கிற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் தான்.

அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல்கள் வருகின்ற போது பெரும்பாலும் வடகிழக்கிற்கு வெளியில் தாங்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களுக்குச் சாதகமான பிரதேசங்களில் போட்டியிட்டு வந்தார்கள்.

அவ்வப்போது வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் தேவை நிமித்தம் தனித்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதனால் நாடு தழுவியதாக ஆதரவாளர்கள் இருக்கத்தக்கதாக அதற்கேற்ப முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் அந்தந்தப் பிரதேசங்களுக்கான பிரதிநிதிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டமையினால் தேசியப்பட்டியலினூடாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தமை ஒரு உற்சாகத்தை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்கள் மீது மக்களின் நம்பிக்கை தளர்ந்து கொண்டு செல்வதை ஆட்சியாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கிறது என்பதைக் காண முடிகின்றது.

இச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுருந்து கொண்டு மக்களின் பலமான குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வரும் சூழலில் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.

தற்போதைய உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் முறையில் பெரும்பாலும் சபைகளை தனிக்கட்சி ஆட்சியமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டாட்சி முறையே அதிகம் சாத்தியப்படுவதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கண்டுகொண்டோம்.

தேசிய அரசியலில் தேசிய கட்சிகளோடு கூட்டாக இருந்தாலும் குறித்த தேர்தலில் தனித்துக்கேட்கும் போது கட்சிகள் ஆசனங்களைப்பெற்று ஆட்சியில் பங்காளர்களாகும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் இம்முறை பல கட்சிகள் தனித்து தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிடுவதைக் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில் வடகிழக்கில் மரச்சின்னத்திலும், வடகிழக்கிற்கு வெளியில் சில இடங்களில் மரச்சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்திலும் இணைந்தும் போட்டியிடுகிறது.

வடகிழக்கிற்கு வெளியில் நீண்டகாலத்தின் பின்னர் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதால் கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பல இடங்களில் அமோக வரவேற்பை மரம் பெற்று வருவதை தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் காண முடிகின்றது.

தேர்தல் இறுதிநேர சூறாவளி பிரச்சாரத்தில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளும் நோக்கில் கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மக்களால் ஆமோக வரவேற்பளிக்கப்படுவதைக் காண முடிகின்றது.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் ஆட்சியமைக்கவும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

தேர்தலின் பின்னரான சூழல் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமானதாக அமையுமென்பதை தேர்தல் கால முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் சமூகம் தொடர்பான போக்கு, எதிர்கால சவால்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமூகமும் தங்களுக்கான தனித்துவக்கட்சி தொடர்பில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளதைக் காண முடிவதோடு, தேசிய மக்கள் சக்தியின் அலையில் அள்ளுண்டு போனவர்கள் தற்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பலரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸை நோக்கி வருவதையும், அதன் வேட்பாளர்களை ஆதரிப்பதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இளைஞர்கள் அநுர அலையில் அள்ளுண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் தங்களது பிரதேசங்களுக்கு தேசிய மக்கள் சக்தி பொருத்தமான வேட்பாளர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதனால் அதிருப்தியடைந்து தங்களது ஆதரவை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வருவதையும் காணலாம்.

நமக்காய் பேசுவதற்கும் ஒரு கட்சி தேவை என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமை ரவூப் ஹக்கீமும் அடையாளம் பெறுகிறார்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

by selvan
May 21, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

by selvan
May 21, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  வருடாந்த மகோற்சவ பெருவிழா  இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்றைய தினம் (21) காலை   உற்சவ மூர்த்திகளுக்கு ...

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

by selvan
May 21, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என...

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

by selvan
May 21, 2026
0

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி