2001
தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
1960
பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா பொறுப்பாட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961
சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. மில்ட்டன் மார்காய் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
1967
கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸ்போ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974
அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாசிங்டனில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978
இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981
பராக் முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது.
1986
செர்னோபில் அணு உலை விபத்து காரணமாக உக்ரைனின் பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1992
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவை உள்ளடக்கிய யுகொசுலாவியக் கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1992
உருசியா மற்றும் 12 முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.
1993
காபோனில் லிப்ரவில் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் சாம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994
தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2002
நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2005
ஏர்பஸ் ஏ380 வானூர்தி தனது முதலாவது சோதனைப் பறப்பை மேற்கொண்டது.
2007
எசுத்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செஞ்சேனை நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
2011
ஐக்கிய அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, ஜோர்ஜியா, டென்னிசி மாநிலங்களில் 205 சுழல் காற்றுகள் தரைதட்டியதில் முன்னூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2018
65 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரியாவுக்குள் அடியெடுத்து வைத்த முதல் வடகொரியத் தலைவர் என்ற பெருமையை கிம் ஜொங்-உன் பெற்றார். கொரியப் பிணக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.




