1915
சிங்கள-முஸ்லிம் கலவரம்: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜுன் 5 இல் முடிவுக்கு வந்தது.
1958
இலங்கை இனக் கலவரம்: கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர். தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.
2007
கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.
1802
குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.
1830
அமெரிக்க ஜனாதிபதி ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
1905
ரஷ்சிய – ஜப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்சியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1918
அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.
1926
போர்த்துக்கலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1937
போல்க்ஸ்வேகன், ஜேர்மனிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜேர்மனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.
1940
இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.
1942
இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.
1948
தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.
1956
பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.
1974
வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.
1975
15 மேற்கு ஆபிரிக்க நாடுகள் இணைந்து மேற்காபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
1977
அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.
1987
மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகஸ்ட் 13 இல் விடுவிக்கப்பட்டார்.
1991
எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995
ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.
1998
பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
1999
இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.
2008
240ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
2010
பாகிஸ்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
2010
மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.
2011
மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.





