1815
இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
1958
இலங்கை இனக்கலவரம், 1958: இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.
1814
நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரான்சிய எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
1842
ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பர்ட்டுடன் இலண்டனில் பயணம் செய்கையில் ஜோன் பிரான்சிசு என்பவன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தான்.
1845
திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
1854
கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பண்டலங்கள் ஆகின.
1876
உதுமானிய சுல்தான் அப்துலசீசு பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மருமகன் ஐந்தாம் முராத் சுல்தானானார்.
1883
நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
1913
லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
1914
அக்காலத்தின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அக்குவித்தானியா தனது முதல் பயணத்தினை இங்கிலாந்து, லிவர்பூலில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி ஆரம்பித்தது.
1925
மே 30 இயக்கம்: சாங்காய் காவல்துறை கிளர்ச்சியில் ஈடுபட்ட 13 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது.
1942
இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானியப் போர் விமானங்கள் ஜேர்மனியின் கோல்ன் நகரில் 90 நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
1961
நீண்ட காலம் டொமினிக்கன் குடியரசை ஆண்ட ரஃபாயெல் துருயீலோ சாந்தோ தொமிங்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1966
முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1967
நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.
1968
பிரான்சியத் தளபதி சார்லஸ் டி கோல் பிரான்சிய தேசியப் பேரவையைக் கலைத்தார். அவரது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பாரிசு நகரில் கூடினர்.
1971
மரைனர் திட்டம்: செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1972
இஸ்ரேலின் லொட் விமான நிலையத்தில் ஜப்பானிய செம்படை தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
1974
ஏர்பஸ் ஏ300 பயணிகள் வானூர்தி முதலாவது சேவையை ஆரம்பித்தது.
1975
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1981
வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1982
பனிப்போர்: எசுப்பானியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.
1987
கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது.
1998
வடக்கு ஆப்கானித்தானில் தக்கார் மாகாணத்தில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1998
பாகிஸ்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
2003
மியான்மாரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் 70 பேர் வரை அரச படைகளினால் கொல்லப்பட்டனர். ஆங் சான் சூச்சி இவ்விடத்தை விட்டு வெளியேறினாலும், பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
2012
லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2013
நைஜீரியாவில் ஒருபால் திருமணம் தடை செய்யப்பட்டது.




