1810
அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள்.
1812
இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் உயிரிழந்தனர்.
1837
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865
அமெரிக்காவின் அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர்.
1895
புதின ஆசிரியர் ஆஸ்கார் வைல்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
1914
அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1926
பாரிசில் அமைந்திருந்த நாடுகடந்த உக்ரைனிய மக்கள் குடியரசின் தலைவர் சைமன் பெத்லியூரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1938
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: அலிசாண்டே நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டனர்.
1940
இரண்டாம் உலகப் போர்: செருமனி போலோன் துறைமுகத்தைக் கைப்பற்றியது.
1946
முதலாம் அப்துல்லா ஜோர்தான் அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
1953
அணுகுண்டு சோதனை: நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955
ஐக்கிய அமெரிக்காவில் கேன்சஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சுழல் காற்று தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
1961
அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963
அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1977
ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1977
வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1979
ஐக்கிய அமெரிக்காவின் டிசி-10 விமானம் ஒன்று ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.
1981
ரியாத் நகரில் பகுரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
1982
போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1985
வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1997
சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000
லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2002
சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
2002
மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.
2008
நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
2009
வட கொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
2012
டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
2013 –
இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள் மீது மாவோயிசப் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
2013
பாகிஸ்தான், குஜராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.




