1837
இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் 2000 வரையான வீடுகள் நீரில் மூழ்கின, பாலங்கள் பல சேதமடைந்தன.
1958
இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
1958
இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1813
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின.
1860
இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தார்.
1883
மூன்றாம் அலெக்சாந்தர் ரஷ்சியப் பேரரசராக முடி சூடினார்.
1896
அமெரிக்காவின் மிசூரி, சென் லூயிசு, இலினொய் ஆகிய இடங்களில் சுழல் காற்று வீசியதில் 255 பேர் உயிரிழந்தனர்.
1930
உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.
1937
கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் ஜேர்மனியிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்போக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட் “காலவரையறையற்ற தேசிய அவசரகால நிலையைப்” பிறப்பித்தார்.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
1942
இரண்டாம் உலகப் போர்: யூத இனவழிப்பின் முக்கிய அதிகாரி ரைன்கார்ட் ஏட்ரிச் பிராகா நகர சமரில் காயமடைந்தார். எட்டு நாட்களின் பின்னர் இவர் இறந்தார்.
1958
எப்-4 பன்டெம் II இன் முதலாவது பரப்பு இடம்பெற்றது.
1960
துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது ஜனாதிபதி செலால் பயார் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965
வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967
அவுஸ்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1971
மேற்கு ஜேர்மனியில் நடந்த தொடருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
1971
கிழக்குப் பாகிஸ்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாகிஸ்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.
1975
இங்கிலாந்தில் டிபில்சு பாலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
1980
தென் கொரிய இராணுவம் குவாங்சு நகரை குடிப்படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. 207 பேர் கொல்லப்பட்டனர்.
1994
சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாந்தர் சொல்செனித்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்சியா திரும்பினார்.
1996
ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் செச்சினியக் கிளர்ச்சியாளர்களை முதல் தடவையாக சந்தித்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
2001
இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழு அபு சயாப் போராளிகள் பிலிப்பீன்சு, பலவான் நகரில் 20 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இப்பிரச்சனை 2002 சூன் மாதத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டது.
2006
இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நிகழ்ந்த 6.4 அளவு நிலநடுக்கத்தில் 5.700 பேர் வரை உயிரிழந்தனர், 37,000 பேர் காயமடைந்தனர்.




