1981
யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
2004
ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005
இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1859
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.
1889
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.
1902
இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
1910
தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911
டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1911
மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.
1921
அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.
1935
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
1941
ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.
1961
தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
1962
மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1970
பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.
1973
கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது.
1973
சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
1985
வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.
1991
அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐ.நாவின் ஆதரவில் எட்டப்பட்டது.
1997
கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.
2013
சிறுகோள் “1998 கியூ.ஈ.2” அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது.
2017
காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.





