1946
இலங்கையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக இரத்மலானை வானூர்தி நிலையம் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.
1947
சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
1958
இலங்கை இனக்கலவரம், 1958: கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
1981
தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் சிங்களப்படையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
1812
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.
1831
யேம்சு கிளார்க் ரொஸ் முதலாவது ஐரோப்பியராக வட காந்தமுனையை அடைந்தார்.
1855
அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
1879
கடைசி பொனபார்ட் மரபுரிமைக்குரிய நெப்போலியன் இயூஜின் ஆங்கிலோ-சூலு போரில் கொல்லப்பட்டார்.
1913
கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.
1929
இலத்தீன் அமெரிக்காவின் பொதுவுடமைக் கட்சிகளின் 1ஆவது மாநாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்றது.
1941
இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது. கிரீட் ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் வந்தது.
1941
ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1943
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் பிஸ்கே விரிகுடாவில் ஜேர்மனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி அவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1946
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உருமேனியாவின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.
1959
நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
1962
நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1964
கென்யா குடியரசானது.
1964
சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
1971
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1978
டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
1979
90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
1988
ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1990
பனிப்போர்: ஜார்ஜ் புஷ், மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் வேதி ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
1993
சாரயேவோவில் தொப்ரிஞ்சா நகரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.
1999
அமெரிக்கன் எயர்லைன்சு 1420 விமானம் டாலசில் இருந்து லிட்டில் ராக் செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
2001
டெல் அவீவ் நகரில் இரவு விடுதி ஒன்றில் அமாசுப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
2001
நேபாள அரசுப் படுகொலைகள்: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் திபெந்திரா தனது தந்தை மன்னர் பிரேந்திரா, தாயார் ஐசுவர்யா உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
2009
இரியோ டி செனீரோவில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த ஏர் பிரான்சு ஏஎப் 447 விமானம் பிரேசில் கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து
228 பேரும் உயிரிழந்தனர்.
2011
எண்டெவர் விண்ணோடம் தனது கடைசிப் பறப்பை முடித்து பூமியில் தரையிறங்கியது.
2015
சீனாவின் ஊபேய் மாகாணத்தில் யாங்சி ஆற்றில் 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.





