1912
இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1958
இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1987
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1805
நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் அரசனாக மிலான் பேராலயத்தில் முடிசூடினான்.
1822
நோர்வேயில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
1830
அமெரிக்கப் பழங்குடி மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் இதனை சட்டமாக்கினார்.
1864
மொன்ட்டானா அமெரிக்கப் பிராந்தியமாக இணைந்தது.
1879
ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.
1896
இரண்டாம் நிக்கலாசு ரஷ்சியாவின் கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
1896
டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் முதல் பதிப்பு வெளியானது.
1917
அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
1918
ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை: வடக்கு பிரான்சில், கூட்டு நாடுகளின் படையினர் பிரான்சின் டன்கிர்க் நகரில் இருந்து பெருந்தொகையானோரை வெளியேற்றினர்.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் கலே முற்றுகை முடிவுக்கு வந்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: கசாலா சண்டை இடம்பெற்றது.
1966
பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1968
ஐஸ்சிலாந்தில் வீதிப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.
1969
அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1970
சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
1971
வங்காளதேச விடுதலைப் போர்: பாகிஸ்தான் இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1972
அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன், சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1983
ஜப்பான், வடக்கு ஒன்சூவைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
1991
தாய்லாந்தில் லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.
1998
திருடப்பட்ட தலைமுறைகள்: அவுஸ்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.
2002
மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர்ப் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006
ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.




