வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் தமிழரசுக்கட்சியானது தமிழ் பிரதேசங்களில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுகின்றது. தனித்தே போட்டியிடுகின்றது.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான இணைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் சாதகமான இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தனித்து போட்டியிடுகினேறோம்.
தேர்தல் நிறைவடைந்ததும் ஆட்சியமைகும் சூழல் ஏற்படும் போது தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைக்க முடியும் தென்னிலங்கையை தலைமையகமாக கொண்ட கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
