இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள்வெட்டினை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.