முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அலுவலக கட்டிட நிலத்தை உடைத்து தோண்டி பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் சி.ஐ.டியினர் இன்று பகல் 11.00 மணிக்கு முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்தவர்களை அழைத்து அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பெற்றுக் கொண்டு ஒரு இடத்தில் இருக்க வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவோ உட்செல்லவோ விடாது கட்டிட நிலத்தை தோண்டி பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


