• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

Thamil by Thamil
May 30, 2025
in இலங்கை செய்திகள்
0
தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!
Share on FacebookShare on Twitter

போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழகத்துக்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சின்னையா சிவலோகநாதன் எனும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவரே இவ்வாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இதன்போது 1997 ஆம் ஆண்டு ஏழாலையில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து 12 ஆயிரம் ரூபா படகுக்குச் செலுத்தி சட்டவிரோதமாக கடல் வழியாகவே சந்தேகநபர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். இருந்தபோதும் இந்தக் காலத்தில் சட்டபூர்வமாகப் பயணிக்கும் வாய்ப்பும் இருந்தமையால் இவர் எதற்காகச் சட்டவிரோதமாக பயணித்தார் என்பது தொடர்பில், தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்காது விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனக் கேட்டு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் 45/01 கீழ் குற்றம் சாட்டப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரைக் காக்கும் நோக்கில் இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது இந்த நபர் 1987 ஆம் ஆண்டு தமிழகத்துக்குச் தப்பிச் சென்றார்.

இவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் கண்ணகிபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக உரிய முறைகளின் கீழ் விண்ணப்பித்து சட்டபூர்வமாக நாடு திரும்பினார்.

முகாமில் அகதியாக வாழ்ந்தார் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் வழங்கிய (யு.என்.எச்.சி.ஆர்.) பதிவுச் சான்றிதழ், இலங்கை திரும்ப தமிழ்நாடு பொலிஸுக்குத் செய்த விண்ணப்பம், அதற்கு தமிழ்நாடு பொலிஸார் அவர் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வழங்கிய சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு விண்ணப்பித்து இலங்கை திரும்புவதற்காகப் பெற்றுக்கொண்ட பிரயாண அனுமதி ஆகியவற்றைச் சரி பார்த்து ஐ. நா. அமைப்பே இலவச விமானச் சிட்டையையும் வழங்கியது. அவற்றின் பிரதிகள் மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, குற்றஞ்சாட்டப்படுபவரை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை அகதிகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருப்பது உலகின் சகல நாடுகளுக்கும் தெரியும். ஆனால் இலங்கைப் பொலிஸாருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது. அகதி என்றால் அவர் சொல்லாமல்தான் போவார். அவரை அகதியாக ஏற்றுக்கொண்டால் அவர் பயணித்தமை குற்றமாகாது. அது மட்டுமல்ல ஒரு குற்றவியல் நடவடிக்கையாக இருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே 30 வருடங்கள் கடந்துவிட்டன.

இதேநேரம் இலங்கையில் இருந்து அகிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அரசு உத்தியோகபூர்வமாக அழைக்கின்றது ஆனால், திரும்பியவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்குக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டி வரும். தப்ப முடியாது.

இதேநேரம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் சட்டப் பிரிவு 45/01 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்தால் நீதிவான் 47/ஏ பிரிவின் கீழ் பிணை வழங்க முடியும். அதனால் முழுமையாக விடுவிக்க முடியாத பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும்” என்றார்.

இவற்றை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் ஜே.சுபராஜினி சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; விரைவில் சிலர் சிறைக்குள் – நளிந்த தெரிவிப்பு..!

by Thamil
July 19, 2025
0

'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்' என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில்...

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்..!

by Thamil
July 19, 2025
0

"முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்" என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு நேற்றைய தினம்...

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

கடலில் மூழ்கிய இரு இளைஞர்கள் உயிருடன் மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம்...

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை..!

by Thamil
July 19, 2025
0

"நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை" என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்....

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
July 19, 2025
0

வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று (19) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாரவூர்தி ஒன்றுடன்...

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

தனியார் கல்வி நிலையத்தில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி..!

by Thamil
July 19, 2025
0

இன்று (19) காலை யாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. இது...

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இம்மாதம் 24,25 ஆம்...

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்..!

by Thamil
July 19, 2025
0

1996ஓயாத அலைகள் ஒன்று; முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு போர்க் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. 1817ரஷ்ய - அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க்...

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
July 19, 2025
0

கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (19) காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம்...

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (19) திங்கட்கிழமைகாலை 9 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி