நுவரெலியா பிரதேச செயலகத்தின் இயங்கும் பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (30) காலை தொடர் லயன் குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்து உள்ளன. மேலும் பம்பரக்கலை இப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்து நிலைமையை விசாரித்ததோடு, நிவாரண உதவிகளையும், மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
