அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (30) காலை வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.