நல்லதண்ணி சிவனடிபாத மலைக்கு செல்லும் சாலையில் சிவனடி பாத மலைக்கு வந்து செல்லும் உள்நாட்டு யாத்திரிகர்கள் ஊசி மலை பகுதியில் விட்டு சென்று உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உக்கா பொருட்கள் அப் பகுதியில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாத்திரிகர்கள் ஊசி மலை பகுதியில் தங்களது நேர்த்திக் கடன்களை முடித்து விட்டு அப் பகுதியில் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உக்கா பொருட்கள் அப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் எறிந்து விட்டு செல்வதால் சிவனடிபாத மலை வன பகுதிகளுக்கும் வீதியிலும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊசி மலைப் பகுதியிலும் மற்றும் சிவனடிபாத மலைக்கு செல்லும் சாலையிலும் உக்கா பொருட்களை சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் விட்டு செல்வதால் பாரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
