ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் (Horst Kohler) தனது 81 ஆவது வயதில் நேற்று (1) சனிக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட் கோஹ்லர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தார்.
அதன் பின்னர் அரசியலுக்குப் பிரவேசித்து ஜெர்மனியின் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
ADVERTISEMENT
2004 முதல் 2010 வரை ஜேர்மனியின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
அத்துடன், 2009 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.