புத்தளம், நுரைச்சோலை, மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அருகில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மாம்புரி பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் சென்ற சந்தேக நபர்கள் சிலர் அங்கிருந்த மூன்று நபர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.