இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 மற்றும் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்டதொரு நாளில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் நடத்தும் நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இதற்கமைய ஏப்ரல் 10 ஆம் திகதி அரசின் தேர்வாக உள்ளது என்று அறியமுடிகின்றது.
எனினும், தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்பதால் ஏப்ரல் 5 மற்றும் 10 இற்கு இடைப்பட்டதொரு நாளில் தேர்தல் நடாத்தப்படக்கூடும் என அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகப் புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.