நானுஓயாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 28குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகின்றது. இதனால் இன்று (30)அதிகாலை 4 மணியளவில் நானுஓயா லேங்டல் தோட்டத்தில் கடும் மழை காரணமாக 28 குடியிருப்பு பகுதியில் பின்புறத்தில் இருந்து பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இக்குடியிருப்பில் வசித்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை காரலேபேக் தமிழ் வித்யாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் என்பன மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகத்தின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.