குருணாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய மூதாட்டி ஆவார்.
குளியாப்பிட்டியிலிருந்து ஹெட்டிப்பொல நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேனின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.