Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: ஏற்பட்ட
கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், தரம் 10 மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கிய நயம் பரீட்சை வினாத்தாளை வடமாகாண கல்வித் திணைக்களம் அனுப்ப மறந்ததால் பரீட்சை மண்டபங்களில் நேற்று ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10ஆம் தர மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம் இரண்டாவது பகுதிப் பரீட்சை நேற்றையதினம்(15) காலை இடம்பெறுவவிருந்தது. இதன்போதே வடமாகாணக் கல்வித் […]
கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த விபத்து கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் […]
கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த விபத்து கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]
ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இது போன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.