Browsing: அரச

இன்று மதியம் 12.மணிக்கு நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து இடையில் பயணிகள் ஏற்றியமை பற்றி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரச பேருந்தில் பயணித்த காலி பகுதியில் உள்ள இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு […]

சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (ழுபுP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன. இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NயுP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (ஊளுழுள) சிவில் கூட்டு […]

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம்…

கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,…

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.