உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 10,000 ரூபாய்?

நாட்டு நடப்புக்கள் 3 ஆண்டுகள் முன்
55 பார்வைகள்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

நாட்டு நடப்புக்கள்

சீரற்ற காலநிலையால் சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,…

63 0 0
நாட்டு நடப்புக்கள்

போதைப்பொருள் ஒழிப்பு: 1,864 சுற்றிவளைப்புகளில் 1,810 ஆண்கள், 55 பெண்கள் கைது

நச்சுப் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு…

88 0 0
நாட்டு நடப்புக்கள்

வங்கியில் சேமிப்பு பணத்தின் வட்டியில் வாழ்ந்தவர்களிற்கும் இனி ஆப்புத்தான்

இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. இந்த வட்டிக்கும் பொருட்கள் சேவைகள் VAT TAX…

69 0 0
நாட்டு நடப்புக்கள்

இனி பாடசாலை மாணவிகளுக்கு பின்னால் “குரங்குசேட்டை” விடுபவர்களுக்கு ஆப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்…

58 0 0