Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அதிகரித்தது!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கர் நேற்று மாலை பேர்த் நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இதன் போது இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது
மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரச வங்கிகள் மூலம் 1300 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் அதனை மீளச் செலுத்த தவறியுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்இ மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவை நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக அந்த வங்கிகள் மூலம் விவசாயத்துறை […]
ஐஸ்லாந்து – கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எமது நாட்டில், கடநத 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு ‘தேசிய சுதந்திர தினம்’ என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற தினமாக கடந்து போயிருக்கிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாட்டின் தேசிய சுதந்திர நாளன்று தமிழர் தாயக […]
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (09) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. பகல் – இரவு ஆட்டமாக இடம்பெறும் இன்றைய போட்டி பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில்இ அதில் 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையேஇ டெஸ்ட் போட்டியைப் போன்று […]
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைதீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாது பின்னடிப்பது தொடர்பிலே சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளியிட்டார். அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்டு வரும் அதேவேளை தேர்தலை மாத்திரம் நடத்தாமல் பின்னடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின் செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு கல்வி வலயத்திற்கு […]
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான…