Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: செய்திகள்
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்து வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை […]
ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் இன்று கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் இன்று பாடசாலைகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிறுவர் எழுச்சிவாரத்தின் இறுதி நாள் நேற்றைய தினம் கப்பலேந்திமாதா…
சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை சுதந்திரத்தின் அர்த்தத்தினைக் கேலிக்கூத்தாக்கும் அரசாங்கத்தினால் நேற்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன,…
புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.…
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை , வெறும் நான்கே நாள்களில் வென்றது இலங்கையணி. இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் ,…
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான…
குளவிகள் திடீரெனக் கொட்டியதில் தேயிலை பறிக்கச் சென்ற பெண்கள் ஐந்துபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில்…
ரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு…