Browsing: யாழில்

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த…

யாழ் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது இலங்கை…

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 5 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள். இந்த…

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (20) நபர் ஒருவரின் வீட்டிற்குள் திடீரென உள்நுழைந்த பளை பொலிசார் வீட்டில் ஜஸ் போதை பொருள்…

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி பகுதியைச்…

ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தீவகம்,…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற…

யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பெருமளவான மாவா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை…

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கி விட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர். அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்படப் பலரிடம் அந்தப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ளது என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள செல்வா திரையரங்குக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான பொலிஸ் குழு திருட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த, 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.